மேலும்

நாள்: 25th January 2018

தேர்தல் நாளன்று முப்படைகளும் ரோந்து – தேர்தல் ஆணைக்குழு முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவ வேண்டும் – இந்தோனேசிய அதிபரிடம் சம்பந்தன் கோரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு இந்தோனேசியா உதவ வேண்டும் என்று, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவில் இந்தோனேசிய அதிபர் – முதலீட்டு, வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேச்சு

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார்.  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கூட்டு அரசாங்கத்தை நீடிக்கும் கடிதம் கிடைக்கவில்லை – சபாநாயகர்

கூட்டு அரசாங்கம் தொடர்பான உடன்பாடு நீடிக்கப்படுவது தொடர்பான எந்த கடிதமும் தமக்குக் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை விசாரிக்காவிடின் வழக்குத் தொடர்வோம் – மகிந்த அணி சூளுரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி அனந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.