மேலும்

நாள்: 24th January 2018

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குவியுங்கள் – சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலில் இருந்து விலக சுமந்திரன் திட்டம்? – கனடிய ஊடகத்துக்கு செவ்வி

அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படை வாகனம் மோதி மாணவி பலி – புங்குடுதீவில் பதற்றம்

யாழ். தீவகத்தில் உள்ள புங்குடுதீவில், இன்று காலை சிறிலங்கா கடற்படையின் கவச வாகனம் மோதி, பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

மைத்திரியிடம் வெற்றிக்கிண்ணம்

2018ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கான, வெற்றிக்கிண்ணம் சிறிலங்காவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பின் அமைச்சரவை மாற்றம் – நிதி அமைச்சு கைமாறும்?

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் நாள் நடக்கவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றினால் தள்ளுபடி

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேலும் ஐந்து மனுக்களை சிறிலங்கா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மகிந்த, கோத்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆணைக்குழு பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் பதவியேற்பு

சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமன ஆவணங்களைக் கையளித்தனர்.

சிங்கப்பூர்- சிறிலங்கா இடையே சுதந்திர வர்த்தக உடன்பாடு கைச்சாத்து

சிங்கப்பூருக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில்  அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

மீண்டும் திறக்கப்பட்டது அமெரிக்க மையம்

கொழும்பில் மூடப்பட்டிருந்த அமெரிக்க மையம் (American Center)  நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.