மேலும்

முகநூலில் பிரபாகரனின் படத்துடன் புத்தாண்டு வாழ்த்து – தமிழ் இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில்

prabahakaranவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை முகநூலில் பதிவேற்றிய இரண்டு இளைஞர்களை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னத்துடன் கூடிய புத்தாண்டு வாழ்த்து மடலை முகநூலில் பதிவேற்றியதாக, இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே,  தினேஸ்குமார் மற்றும விஜயகுமார் விதுசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைக் கைது செய்த பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினர், நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜ ஜெயதுங்க முன்னிலையில் நிறுத்தினர்.

விதுசன் றொக்சி என்ற பெயரில் தொடங்கப்பட்ட முகநூல் கணக்கின் ஊடாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலிகளின் இலச்சினை போன்றவற்றைக் கொண்ட 2018 புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறியுள்ளனர் என்று இவர்கள் மீது பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து. அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி 17ஆம் நாள் வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *