மேலும்

நாள்: 21st January 2018

ஒற்றையாட்சி நீடிக்கும் வரை சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது – முதலமைச்சர்

ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post  என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சரவைக்கு வருகிறது சிறப்பு மேல்நீதிமன்ற சட்டவரைவு

ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான சிறப்பு மேல் நீதிமன்றத்தை அமைப்பதற்கான சட்ட வரைவு,  இந்தவாரம் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள அமெரிக்க மையம் மூடப்பட்டது

கொழும்பில் உள்ள அமெரிக்க மையம் (American Center) மறு அறிவித்தல் வரும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை அமர்வுகளை கண்காணிக்கிறதாம் சிறிலங்கா தூதரகம்

கனடாவில் நடந்து வரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை கனடாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி  வெளியிட்டுள்ளது.

நிதி அதிகாரங்களை ஐதேகவிடம் இருந்து பறிக்கிறார் மைத்திரி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஐதேகவினால் கையாளப்பட்டு வந்த தேசிய பொருளாதாரத்தை, தம்வசம் எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அஞ்சல்மூல வாக்களிப்பு – நாளை ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என்று தேர்தல் ஆணைய பணிப்பாளர் நாயகம் ஆர்.எல்.ஏ.எம். இரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பிரபலம் தேடுவதற்காக என்னைப் பயன்படுத்துகின்றனர் – வேட்பாளர்கள் மீது விக்கி குற்றச்சாட்டு

உள்ளூராட்சித் தேர்தலில் தனது பெயரைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும், அது தன்னை மட்டுமே பாதிக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.