மேலும்

மாதம்: January 2018

மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகள் அதிபர் பதவியில் இருக்கலாம் – சட்டமா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2015 ஜனவரி 9ஆம் நாள் தொடக்கம், ஆறு ஆண்டுகளுக்கு அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் பதவிக்காலத்தை முடிவு செய்ய இன்று கூடுகிறது உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பான முடிவை எடுப்பதற்காக சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் திறந்த அமர்வில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்தியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று ஆரம்பமாகும் தர்ம தம்ம மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காகவே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியா செல்லவுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது இந்தியா

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன.

அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனுப்புவதை பிற்போட்டது தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டுகளை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பிற்போட்டுள்ளது.

தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்க வைத்த முதலமைச்சர்

தனது உத்தரவைப் புறக்கணித்த தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலை அதிபர் ஒருவரை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று, மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை அதிர வைத்த “திருடன்…. திருடன்” முழக்கம்

“திருடன்… திருடன்…. ரணில் திருடன்” என்று கூட்டு எதிரணியினரும், “திருடன்… திருடன்…. மகிந்த திருடன்” என்று ஐதேகவினரும் மாறி மாறி குரல் எழுப்பியதால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.

மைத்திரியின் பதவிக்காலம் குறித்து முடிவெடுக்க 5 நீதியரசர்களைக் கொண்ட குழு நியமனம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக முடிவு செய்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் – ரணில் மீது மர்மப் பொருள் வீச்சு

பிணைமுறி மோசடி தொடர்பாக விவாதிக்க சிறிலங்கா பிரதமரின் கோரிக்கையின் பேரில் இன்று கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் கடுமையான கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதில் இழுபறி

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.