மேலும்

நாள்: 16th January 2018

அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் வெளிநடப்பு – முற்றுகிறது முறுகல்

இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிநடப்புச் செய்தார் என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் – உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்துக்கான பாதை தெரியாமல், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீரவை உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டு, உயர்மட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா போன்ற நாடுகளை கடன் பொறிக்குள் தள்ளுகிறது சீனா – அனைத்துலக நாணய நிதியம்

சீனாவின் கடன்கள் சிறிலங்காவைக் கடன் பொறிக்குள் தள்ளி விட்டுள்ளதாக, அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் டேவிட் லிப்டன், ஹொங்கொங்கில் நடந்த மாநாடு ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தவறு செய்து விட்டேன்- என்கிறார் மகிந்த

பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் தாம் தவறு செய்து விட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்வதற்கு முயன்ற விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்காவின் தகவல் தொழில்நுட்பத் துறை அபிவிருத்திக்கு இந்தியா உதவும்

தகவல் தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்வது மற்றும் புதிய போக்குகளை அடையாளம் காண்பதற்கு சிறிலங்காவுக்கு இந்தியா உதவும் என்று இந்திய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார்.

கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும் – சுமந்திரன்

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்கு கூட்டு அரசாங்கம் தொடர வேண்டியது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மைத்திரி பிக்பொக்கட் அதிபர் தான் – ஐதேக விமர்சனம்

பிக் பொக்கட் அதிபர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, விமர்சித்துள்ள ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.மரிக்கார், மகிந்த ராஜபக்சவின் முதுகில் குத்தியது போன்று அவர் ஐதேகவின் முதுகிலும் குத்த முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்று வாருங்கள் ஞாநி

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஞாநி எனக்கு அறிமுகமாகினார்.   ஜானகி மகளிர் கல்லூரியில் அவர் அரங்கேற்றிய பலூன் நாடகத்தை காண்கையில்தான் ஞாநியின் அறிமுகம் கிடைத்தது. நான் இடதுசாரி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், ஆனந்த விகடன் இதழில், நக்சல் அமைப்பு குறித்து, ஞாநி எழுதிய தவிப்பு என்ற புதினம் தொடராக வந்தது.