மேலும்

நாள்: 17th January 2018

மைத்திரிக்கு எதிராக வாய் திறக்கக் கூடாது – ஐதேகவினருக்கு ரணில் கட்டளை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக, இனிமேல் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று, ஐதேக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் சபாநாயகரிடம்

மத்திய வங்கி பிணை முறி விசாரணை அறிக்கை மற்றும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை என்பன, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக் கடன் கழிக்கவே அமைச்சரவையை விட்டு வெளியேறினாராம் சிறிலங்கா அதிபர்

அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோபத்துடன் வெளியேறிச் செல்லவில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை – விசாரணை நடத்த சிறிலங்கா அரசு முடிவு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமை கொண்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

கூடுதல் நிலப்பரப்புடன் சிறிலங்காவின் புதிய வரைபடம்

சிறிலங்காவின் புவியியல் வரைபடத்தை மீள வரையும் பணிகள் 60 வீதம் நிறைவடைந்துள்ளதாக, நிலஅளவைத் திணைக்களத்தின் அளவையாளர் நாயகம், உதயகாந்த தெரிவித்துள்ளார்.

சீன உதவியுடன் 13 மருத்துவமனைகள் அபிவிருத்தி – வடக்கு மருத்துவமனைகள் புறக்கணிப்பு

சீன அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் 13 மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகம் நேற்று ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகம் நேற்று ஆரம்பமாகியுள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்புடன், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களிடம் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்தது

ஞாநி நாடறிந்த மூத்த பத்திரிகையாளர். எதையும் எவர் முன்னும் நேர்படப்பேசும் மனத் திண்மை பெற்ற மனிதராக இதழியல் துறையில் இயங்கி வருபவர். அவரது ஓ  பக்கங்களுக்கென்று தனித்த வாசகர் வட்டம் உண்டு. அப்பக்கங்களின் வெக்கை தாளாமல் சில இதழ்கள் வெளியிட மறுத்த வரலாறும் உண்டு. தீம்தரிகிட,  தினமணி கதிர் உள்ளிட்ட சில இதழ்களின் ஆசிரியர் பொறுப்பிலும் பணியாற்றியவர்.

சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஜாவிட் பஜ்வா நேற்று சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.