மேலும்

மாதம்: January 2018

சாணக்யபுரி மாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு மாத்திரம் அழைப்பு

வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாட்டுக்கு சார்க் நாடுகளில் சிறிலங்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ராஜகிரிய மேம்பாலத்துக்கு சோபித தேரரின் பெயரைச் சூட்டுமாறு சிறிலங்கா அதிபர் பணிப்பு

ராஜகிரிய மேம்பாலத்துக்கு வண. மாதுளுவாவே சோபித தேரரின் பெயரைச் சூட்டுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜெனிவாவில் இருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத ஆரியசிங்க – மார்ச் அமர்வுக்கு முன் இடமாற்றம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு வரும் பெப்ரவரி 26ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அங்கிருந்து திருப்பி அழைக்கப்படவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தயா மாஸ்டர் மீது தாக்குதல் – கத்தி வெட்டில் இருந்து தப்பினார்

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைமையகத்தில் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய தயா மாஸ்டர் யாழ்ப்பாணத்தில் நேற்று தாக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாடசாலை அனுமதியில் மனித உரிமை மீறல் – சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு

தேசிய பாடசாலைகளுக்கான மாணவர்களின் அனுமதியில் சிறிலங்கா படையினர், காவல்துறையினர், மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை கொடுப்பது மனித உரிமை மீறல் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அகதி முகாம்களில் மத்திய அரச அதிகாரிகள் ஆய்வு – இரட்டைக் குடியுரிமை கோரிக்கை நிராகரிப்பு

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

நாளை மறுநாள் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு எதிர்வரும் 10ஆம் நாள் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது என்று பதில் நாடாளுமன்றச் செயர் நீல் இத்தவெல அறிவித்துள்ளார்.

அமெரிக்க, இந்திய, பிரித்தானிய நிபுணர்களின் உதவியுடன் தடயவியல் கணக்காய்வு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா  போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடன்பொறிகள் நிறைந்த சீனாவின் பட்டுப்பாதை

சீனாவின் பட்டுப்பாதைகள் மற்றும் கரையோரப் பட்டுப் பாதைகள் போன்றன இதன் வர்த்தகப் பாதைகள் அமைந்துள்ள மத்திய ஆசியா மற்றும் இந்திய மாக்கடலிற்குக் குறுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. பட்டு என்பது சீனாவின் வர்த்தகச் செயற்பாட்டில் மிகச் சிறிய பங்கையே கொண்டுள்ள போதிலும் இது சீனாவின் அடிப்படை வர்த்தகச் செயற்பாடாகக் காணப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

500 குளங்களைப் புனரமைக்கிறது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 500 நடுத்தர அளவுடைய குளங்களை புனரமைப்புச் செய்யவுள்ளது.