மேலும்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட ஆலோசகரை நியமிக்கிறது அமெரிக்கா

eagle-flag-usaஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், சொத்துக்களை மீட்பதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு உதவவும், சிறிலங்காவுக்கு வதிவிட சட்ட ஆலோசகர் ஒருவரை அமெரிக்கா வழங்கவுள்ளது.

கொழும்பில் தங்கியிருந்து, இந்த சட்ட ஆலோசகர் ஆலோசனைகளை வழங்குவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவினர், வொசிங்டனில் நடந்த பூகோள சொத்து மீட்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒபாமா அரசாங்கம் பதவியில் இருந்த போது, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, திருடப்பட்ட நிதியை மீட்பதற்கு கொழும்புக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் 18.5 பில்லியன் டொலரை, மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்திருப்பதாக தற்போதைய அரசாங்கம் குற்றம்சாட்டி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *