மேலும்

சாவகச்சேரி நகரசபைக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் அரசுக் கட்சி

Ilankai-Tamil-Arasu-Kadchiசாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், உதவித் தெரிவத்தாட்சி அதிகாரியிடம், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில், வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன், மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய பிரமுகரான அருந்தவபாலன் உள்ளிட்டவர்கள், சாவகச்சேகரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தைச் செலுத்தி வேட்பாளர் விண்ணப்படிவத்தைப் பெற்றுள்ளனர்.

முதலில் வேட்புமனுக் கோரப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளில் சாவகச்சேரி நகரசபை மாத்திரம் உள்ளடங்கியுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டுப் பேச்சுக்கள், இன்னமும் இழுபறி நிலையில் இருக்கும் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சி சாவகச்சேகரி நகரசபைக்குப் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இங்கு போட்டியிடுவதற்காக ஏற்கனவே, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி, மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *