மேலும்

மாதம்: December 2017

சிறிலங்கா தேயிலைக்குத் தடை – அவசர பேச்சு நடத்த மூன்று அமைச்சர்கள் ரஷ்யா பயணம்

சிறிலங்காவில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவசர பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்காவின் மூன்று அமைச்சர்கள் மொஸ்கோவுக்குச் செல்லவுள்ளனர்.

வேட்புமனுப் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் – என்கிறார் சம்பந்தன்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தயாரிப்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

வடக்கு முதல்வரையும் சந்திக்கிறார் மலேசியப் பிரதமர்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள மலேசியப் பிரதமர் மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறிலங்காவில் இருந்து விடைபெறுகிறார் சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிய யி ஷியான்லியாங், பதவிக்காலம் முடிந்து நாளை நாடு திரும்பவுள்ளார்.

இன்று கொழும்பு வருகிறார் மலேசியப் பிரதமர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மலேசியப் பிரதமர் டத்தோ சிறி மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார்.

முதலமைச்சரின் கூட்டத்தை புறக்கணித்த மத்திய அரசு அதிகாரிகள் – மீண்டும் பனிப்போர்

காணிப் பிணக்குகள் குறித்து ஆராய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திணைக்களங்கள் மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலர்கள் புறக்கணித்துள்ளனர்.

ரஷ்யாவின் தடையினால் சிறிலங்கா அதிர்ச்சி – மொஸ்கோவுக்கு விரைகிறது உயர்மட்டக் குழு

சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்திருப்பது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னிச்சையான தடுத்து வைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

சிறிலங்காவில் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று, ஐ.நா நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைப்புகள் குறித்த ஐ.நா பணிக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் சிறிலங்காவில் மேற்கொண்ட 12 நாட்கள் பயணத்தின் முடிவில் கொழும்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊடகங்களைப் பழிசொல்வது நியாயமா?

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில் யுனெஸ்கோ நிறுவனத்தால் கடந்த வாரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  செய்தி சேகரிக்க வரும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர்களுடன் சில ஊடக நிறுவனங்களும் மூத்த ஊடகவியலாளர்களும் இணைந்து இரகசிய சதியில் ஈடுபட்டுள்ளதாகவும்  தெரிவித்திருந்தார்.

வடக்கின் நான்கு மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியது கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நான்கு மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.