மேலும்

முதலமைச்சரின் கூட்டத்தை புறக்கணித்த மத்திய அரசு அதிகாரிகள் – மீண்டும் பனிப்போர்

CM-WIGNESWARANகாணிப் பிணக்குகள் குறித்து ஆராய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திணைக்களங்கள் மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலர்கள் புறக்கணித்துள்ளனர்.

வனவளத் திணைக்களம், வன வாழ் உயிரினங்கள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பன, பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் நேற்று யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தத் திணைக்களங்களின் அதிகாரிகளும் பங்கேற்கவில்லை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் இருந்து வரவிருந்த பிரதேச செயலர்களை மாவட்ட அரச அதிபர் தடுத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வடக்கு மாகாணசபை நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்கு மத்திய அரசு விரும்பாத நிலையே காணப்படுவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *