மேலும்

நாள்: 5th October 2017

சம்பந்தன், மாரப்பனவுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு

பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான வெளிவிவகாரப் பணியக அமைச்சர் மார்க் பீல்ட் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் சந்திப்பு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவின் உதவிச் செயலர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் எரிபொருள் சந்தையைக் கைப்பற்ற சீன நிறுவனங்கள் திட்டம் – அரசாங்கம் நிராகரிப்பு

அம்பாந்தோட்டையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, உள்ளூரில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு சீனா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

போர்க்கப்பல் கொள்வனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கடற்படைத் தளபதியை ஓய்வுபெற வைக்க அழுத்தம்?

ரஷ்யாவிடம் இருந்து 24 பில்லியன் ரூபாவுக்குப் போர்க்கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கைவிரித்தது அவுஸ்ரேலிய தூதரகம்

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய அரசின் தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடலை சிறிலங்காவுக்கு அனுப்பும் வேலை தம்முடையது அல்ல என்றும் அதனை பபுவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று ஜேர்மனி செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தனிப்பட்ட பயணமாக ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர், பின்லாந்துக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்க ஐவர் குழு அறிவிப்பு – இருவர் தமிழர்கள்

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்கான ஐந்து பேர் கொண்ட குழு சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு- தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி

கொழும்பு- தூத்துக்குடி இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.