மேலும்

நாள்: 18th October 2017

புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய, மல்வத்த கூட்டு சங்க சபா முடிவு

புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ இப்போதைய சூழலில் நாட்டுக்கு அவசியம் இல்லை என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின்  கூட்டு சங்க சபா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடனான பேச்சுக்களில் காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் – சிறிலங்கா இடையிலான வெளிவிவகாரச் செயலர்கள் மட்டத்திலான, ஐந்தாவது சுற்று அரசியல் கலந்துரையாடல்களின் போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உண்மை நண்பனாகவும், சகோதரனாகவும் உதவியது பாகிஸ்தான் – சிறிலங்கா அதிபர் பெருமிதம்

சிறிலங்கா- பாகிஸ்தான் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

தாமதமாகும் உள்ளூராட்சித் தேர்தல் – கண்காணிப்பு அமைப்புகள் அதிருப்தி

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட சிறிலங்கா வருகிறது இந்திய குழு

மட்டக்களப்பில் 32 சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும், சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் மீண்டும் இழுபறி

நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேசசபையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியினால், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.