மேலும்

நாள்: 28th October 2017

கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை சிறிலங்கா நிராகரிப்பு

கட்டலோனியாவின் தனிநாட்டுச் சுதந்திரப் பிரகடனத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஸ்பெய்னின் தன்னாட்சிப் பிராந்தியமான கட்டலோனியாவின் நாடாளுமன்றம் நேற்று சுதந்திரமான நாடாக கட்டலோனியாவைப் பிரகடனம் செய்திருந்தது.

இந்தியாவுக்குப் பயணமானார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, மூன்று நாட்கள் பயணமாக, இன்று காலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நான்கு அமெரிக்க நாசகாரிகள் கொழும்பு துறைமுகம் வந்து சேர்ந்தன

அமெரிக்க கடற்படையின் 11 ஆவது விமானந்தாங்கி தாக்குதல் அணியில் இடம்பெற்றுள்ள நான்கு நாசகாரி போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

தனிநாடாக சுதந்திரப் பிரகடனம் செய்தது கட்டலோனியா

ஸ்பெய்னின் தன்னாட்சிப் பிராந்தியமான, கட்டலோனியாவின் நாடாளுமன்றம் நேற்று தனிநாடாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. ஸ்பெயினின் மக்கள் தொகையில், 16 வீதத்தைக் கொண்ட கட்டலோனிய மக்கள், கட்டலோனியாவை தனிநாடாகப் பிரகடனம் செய்ய  வேண்டும் என்று கோரிப் போராட்டம் நடத்தி வந்தனர்.

சிறிலங்காவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்

சிறிலங்காவில் இலத்திரனியல் ‘ஸ்மார்ட்’ தேசிய அடையாள அட்டை விநியோகம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தினார்.

கொழும்பு துறைமுகத்தில் தென்கொரிய நாசகாரி போர்க்கப்பல்

தென்கொரியக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று, எண்ணெய் விநியோக துணைக்கப்பலுடன் நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நொவம்பர் 1ஆம் நாள் வெளியாகிறது உள்ளூராட்சித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வரும் நொவம்பர் 1ஆம் நாள் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சீன அதிபருக்கு சிறிலங்கா பிரதமர் வாழ்த்து

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகவும்,  இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானந்தாங்கி கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிலங்கா அமைச்சர்கள்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கு சிறிலங்கா அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.