மேலும்

நாள்: 26th October 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலியை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு மரணம்

காணாமல்போன தனது கணவரான அமலன் லியோன் மற்றும் மகனான றொசான் லியோன் ஆகியோரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக முயற்சித்த மன்னாரைச் சேர்ந்த 58 வயதான ஜசிந்தா பீரிஸ் சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பால் மரணமாகியுள்ளார். காணாமல் போன தனது கணவன் மற்றும் மகன் தொடர்பான வழக்கொன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் ஜசிந்தா கொழும்பிற்குச் சென்றிருந்தார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா அட்மிரலாகப் பதவி உயர்வு

சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இந்திய- சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சமுத்திரவியல் ஆய்வு இன்று ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சமுத்திரவியல் ஆய்வின் இரண்டாவது கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. சிறிலங்காவின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகளில், இன்று ஆரம்பமாகும் இந்த ஆய்வு, டிசெம்பர் 21ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலராக கிரேஸ் ஆசீர்வாதம் நியமனம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் புதிதாக, இராஜாங்கச் செயலர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் நாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பதவியை உருவாக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் பணிக்காலம் நீடிப்பு

நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் பணிக்காலம், ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

துறைமுக நகருக்கான நில மீட்பு பணிகளில் 50 வீதம் பூர்த்தி

கொழும்பு துறைமுக நகரத்தை அமைப்பதற்கான, நிலத்தை உருவாக்கும் பணிகள் பாதிக்கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், நிலத்தை உருவாக்கும் பணிகள், 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் சிறிலங்காவின் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.