மேலும்

மாதம்: October 2017

களுத்துறைச் சிறையில் டக்ளஸ் மீது தாக்குதல் நடத்திய 6 பேருக்கு கடூழியச் சிறைத்தண்டனை

ஈபிடிபியின் பொதுச்செயலரான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா  மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், ஆறு சந்தேக நபர்களுக்கு, தலா பத்தரை ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருணாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டி முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் விவாதம் ஆரம்பம் – எதிரணி வரிசையில் முன்னாள் பிரதி அமைச்சர்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று காலை ஆரம்பமானது.

இடைக்கால அறிக்கை விவாதத்தை புறக்கணிப்பதாக வீரவன்ச அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில், தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு மும்பையில் சிறப்பு கொமாண்டோக்களின் பாதுகாப்பு

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு கொமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா வருகிறார் அவுஸ்ரேலிய பிரதமர்

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், சிறிலங்காவுக்கான  பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவில் ஜனநாயக மறுசீரமைப்புக்கு 14 மில்லியன் டொலரை வழங்கியது அமெரிக்கா

சிறிலங்காவில் ஜனநாயக மறுசீரமைப்பு பணிகளுக்காக அமெரிக்கா 14 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரதி அமைச்சர் டுலீப் விஜேசேகரவை பதவி நீக்கம் செய்தார் சிறிலங்கா அதிபர்

அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் டுலீப் விஜேசேகரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.

மணியந்தோட்டம் துப்பாக்கிச் சூட்டுக் கொலை – விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணையைத் தவிர்க்கவே உண்ணாவிரதமாம் – அனுராதபுர சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை

நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்க்கவே, அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக, சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.