மேலும்

நாள்: 23rd October 2017

ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டு பெரும் பிரச்சினையாக மாறலாம் – ஐ.நா அறிக்கையாளர் எச்சரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு தழுவிய கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குதிப்பு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடன் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும், வடக்கு- கிழக்கு தழுவிய ரீதியிலான கையெழுத்துத் திரட்டும் போராட்டம் ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

சிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்

இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், சிறிலங்காவுக்கு வரவுள்ளன.

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றம் முன் கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்காவுக்கு வரும் அமெரிக்காவின் 6 நாசகாரி போர்க்கப்பல்கள்

அமெரிக்க கடற்படையின் ஆறு நாசகாரிப் போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஎஸ் அமைப்பில் சிறிலங்கா மருத்துவர்கள் – திடுக்கிடும் காணொளி

ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தேசம் தீவிரவாதிகளுடன் இணைந்து சிறிலங்காவைச் சேர்ந்த மருத்துவர்களும் பணியாற்றுவதாக, ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைத் தராது- என்கிறார் கோத்தா

மேலதிக அதிகாரப் பகிர்வு தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்காது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் – கோட்டே கல்யாணி காரக சங்க சபா முடிவு

இப்போதைய சூழலுக்குப் புதிய அரசியலமைப்பு பொருத்தமில்லை என்பதால், வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோட்டே, சிறி கல்யாணி சமக்ரி தர்ம மகாசங்க சபாவின், கல்யாணி காரக சபா ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

இம்மாதம் புதுடெல்லிக்குப் பறக்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தமாதம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு

யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.