மேலும்

நாள்: 15th October 2017

வேட்பாளர்கள் தெரிவில் இறங்கியது கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தினால் பொருத்தமான பெண் வேட்பாளர்களை தேடி அலையும் அரசியல் கட்சிகள்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி அலையத் தொடங்கியுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வரிப்பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வர முடிவு

சிறிலங்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த ஆண்டு வரிப் பொறுப்பு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்படவுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரியை இரட்டிப்பாக்கும் புதிய திட்டத்துக்கமைய இந்த நடைமுறை கொண்டு வரப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

335 உள்ளூராட்சி சபைகளுக்கு ஜனவரி 20இல் தேர்தல் நடப்பது உறுதி – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் 2018 ஜனவரி 20ஆம் நாள், 333 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறுவது உறுதி என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்ட பேச்சில் சுமந்திரனும் பங்கேற்பு

மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்றன.