மேலும்

நாள்: 6th October 2017

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார்

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் வரும் 10 ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பதவி விலகினார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த  றிப்கான் பதியுதீன் வடக்கு  மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.

இந்தியத் துணைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் – 28 பேர் கைது

அம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டு எதிரணியினரை சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டும், கலைத்தனர்.

சிறிலங்கா அதிபரிடம் இருந்து நழுவியது அமைதிக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, அணுஆயுதங்களை அழிப்பதற்கான அனைத்துலகப் பரப்புரை அமைப்புக்கு வழங்கப்படுவதாக ஒஸ்லோவில் நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு சிறிலங்கா அதிபருக்கு கிடைக்குமா? – இன்று அறிவிப்பு

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து சிங்கள மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை – சம்பந்தன்

அரசியலமைப்பின் ஊடாக பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறிலங்கா படைகளுடனான கூட்டுப் பயிற்சிகள் அதிகரிக்கும் – அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வடக்கு- கிழக்கு இணைப்பு விட்டுக் கொடுப்புகளுடன் இடம்பெற வேண்டும்- ஹக்கீம்

வடக்கு- கிழக்கு இணைப்பு விட்டுக் கொடுப்புகளுடன் இடம்பெற ​வேண்டும் என்றும் அது தொடர்பாகப் பேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தேசிய செயற்திட்டம் – அமைச்சரவையில் முன்வைத்தார் சிறிலங்கா பிரதமர்

மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.