மேலும்

நாள்: 17th October 2017

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாடாளுமன்றில் பிரேரணை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி, விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சமர்ப்பிக்கவுள்ளார்.

சிறிலங்காவில் சிறப்பு வசதிகளைக் கொண்ட முதல் சிறைச்சாலை

கைதிகளுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட- அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட சிறிலங்காவின் முதல் சிறைச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் 10 மடங்கு அதிகரிப்பு – டோறாவுக்குப் பதில் பீரங்கிப் படகுகள்

கடந்த இரண்டு மாதங்களில், வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் முதலாவது அரசியல் பேச்சுக்களை நடத்துகிறது மைத்திரி அரசு

பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர் தெஹ்மினா ஜன்ஜூவா இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா- பாகிஸ்தான் இடையிலான ஐந்தாவது சுற்று அரசியல் கலந்துரையாடல்களில் பங்கேற்கவே இவர் கொழும்பு வரவுள்ளார்.

வித்தியா கொலை குற்றவாளிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும், மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.