மேலும்

நாள்: 21st October 2017

பொறுப்புக்கூறல் விவகாரங்களைத் துரிதப்படுத்துவதாக ஐ.நா சிறப்பு நிபுணரிடம் மைத்திரி வாக்குறுதி

பொறுப்புக்கூறல் விவகாரங்களை துரிதமாக முன்னெடுப்பதாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்பிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நீதி வழங்கும் செயற்பாடுகளை அரசியல்மயப்படுத்தக் கூடாது – ஐ.நா நிபுணர் எச்சரிக்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான செயற்பாடுகள், அரசியல் மயப்படுத்தப்பட்டால், நிலைமாறு கால நீதி செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டு விடும் என்று உண்மை, நீதி, இழப்பீடு மற்றும்  மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.

‘ஏகிய இராஜ்ய’வை எதிர்ப்பது ஏன்? – முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான  சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார்.

சிறிலங்காவிலேயே வறுமை நிலையில் வடக்கு மாகாணம் முதலிடம்

சிறிலங்காவில் வறுமை நிலை குறைந்துள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில்  வறுமை நிலை அதிகளவில் உள்ளதாக சிறிலங்காவின் சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மகிந்த தலைமையில் பரப்புரைப் பேரணிகள் – அடுத்த மாதம் தொடங்குகிறது

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்கு வைத்து, சிறிலங்கா பொதுஜன முன்னணி தொடர் பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளது.

இன்று கூட்டமைப்பைச் சந்திக்கிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

விளக்கமறியலில் இருந்து கொண்டு நீதிமன்றுக்கு ஆட்டம் காட்டும் கொமடோர் தசநாயக்க

2008/09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்பட்ட, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர், கொமடோர் டிகேபி தசநாயக்கவை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாதது ஏன் என்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.