மேலும்

நாள்: 20th October 2017

யதார்த்தத்தை புரிந்து செயற்படுங்கள் – வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு புதுடெல்லியில் அறிவுரை

வடக்கு மாகாணசபை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும் என்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வலுவூட்டல் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் குடும்பத்தினரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பினார் சிறிலங்கா அதிபர்

சட்டமா அதிபரும், நீதி அமைச்சரும் வெளிநாடு சென்றிருப்பதால், அடுத்தவாரம் நாடு திரும்பிய பின்னர், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறி, அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும், தமிழ் அரசியல்பிரமுகர்களையும் சிறிலங்கா அதிபர் வெறும் கையுடன் திருப்பி அனுப்பியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தோனேசியப் போர்க்கப்பல்

இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது.

கூட்டறிக்கைக்குப் பின்னால் மகாநாயக்கர்களே உள்ளனர் – அஸ்கிரிய பீடத்தின் செயலாளர்

அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களும், இரு பீடங்களின் காரக சங்க சபாவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்குப் பின்னால் இருப்பதாக அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மக்களை தவறாக வழிநடத்த முயற்சி – ஊடகங்கள் மீது சிறிலங்கா பிரதமர் பாய்ச்சல்

புதிய அரசியலமைப்புக்கு அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக, ஊடகங்கள் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.