மேலும்

நாள்: 27th October 2017

நாடாளுமன்றத்துக்கு குண்டு வைப்பதிலேயே வீரவன்சவின் கட்சி குறி

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பை  நிறைவேற்றினால் நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜப்பானிய போர்க்குற்ற தீர்ப்பாய நீதிபதி மோட்டூ நுகுசி சிறிலங்காவுக்கு இரகசிய பயணம்

கம்போடியாவில் போர்க்குற்றங்களை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றிருந்த ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நீதிபதி மோட்டூ நுகுசி மூன்று பேர் கொண்ட ஜப்பானிய குழுவுக்குத் தலைமை ஏற்று சிறிலங்கா வந்துள்ளார்.

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு நாளை மாலை 6 மணியளவில், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயலகத்தில் கூடவுள்ளது.

ஐந்து நாசகாரிகளுடன் நாளை கொழும்பு வருகிறது அமெரிக்காவின் நிமிட்ஸ் விமானந்தாங்கி கப்பல்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் தலைமையிலான நாசகாரி தாக்குதல் கப்பல்களின் அணி நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் 22 ஆவது தளபதியாக பொறுப்பேற்றார் வைஸ் அட்மிரல் ரணசிங்க

சிறிலங்காவின் 22 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் அவர் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றார்.

சிறிலங்காவுக்கு உதவ கட்டார் இணக்கம் – 7 உடன்பாடுகள் கைச்சாத்து

சக்தி, துறைமுகங்கள், உட்கட்டமைப்பு துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு சிறிலங்காவுக்கு உதவ கட்டார் இணக்கம் தெரிவித்துள்ளது. கட்டாருக்கான இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்  தானி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

சீனாவுக்குச் செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நாளை மறுநாள் சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அடிப்படை உரிமை மீறல் மனுவும் பிள்ளையானின் காலை வாரியது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருலுமான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின், அடிப்படை உரிமை மீறல் வழக்கை, 2018 மார்ச் 20ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றக் கோரி மூன்று அரசியல் கைதிகள் மேல்முறையீட்டு நீதிமன்றில் மனு

அனுராதபுர சிறைச்சாலையில் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், தமக்கு எதிரான வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.