மேலும்

நாள்: 29th October 2017

மணியந்தோட்டம் துப்பாக்கிச் சூட்டுக் கொலை – விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணையைத் தவிர்க்கவே உண்ணாவிரதமாம் – அனுராதபுர சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை

நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்க்கவே, அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக, சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

நேற்றுமாலை கொழும்பு வந்தது யுஎஸ்எஸ் நிமிட்ஸ்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் நேற்றுமாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்க கூடுகிறது அரசியலமைப்பு சபை

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக, சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.

ஜேர்மனி, இத்தாலியில் இருந்து நாடுகடத்தப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது

ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த நான்கு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட 11 நிறுவனங்கள் விண்ணப்பம்

மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.