மேலும்

நாள்: 7th October 2017

இன்று திருப்பதி செல்கிறார் சிறிலங்கா அதிபர் – பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட சிறிலங்காவின் இறைமையின் பக்கமே இந்தியா நிற்கும் – சுமித்ரா மகாஜன்

ஒன்றுபட்ட, சிறிலங்காவின் இறையாண்மையின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்கும் என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணியை உருவாக்குகிறது ஈபிடிபி

வரவிருக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி குறித்து இந்தியா- சிறிலங்கா பேச்சு

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய, சிறிலங்கா கூட்டுப் பணிக் குழு பேச்சுக்களை நடத்தி வருகிறது.