மேலும்

நாள்: 10th October 2017

சீனாவுடன் இணைந்து செயற்படும் நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – அமெரிக்கப் படைத் தளபதி

சீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அமெரிக்கக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரியான றியர் அட்மிரல் டொனால்ட் டி கப்ரியேல்சன்.

மகாநாயக்கர்கள் தவறான புரிதல்களைக் களைய வேண்டும் – விக்னேஸ்வரன் செவ்வி

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான  சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார்.

நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் கட்டுநாயக்கவில் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளரான ஊர்நிலா இரேஷா சில்வா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் இறங்கியது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்காவின் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைக்க முயற்சி – மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர

போர்க்குற்றங்கள் தொடர்பாக வன்னி களமனையில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரைப் பொறுப்புக்கூற வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார்.

அமெரி்க்காவின் பசுபிக் கப்பல்படைத் தளபதி சிறிலங்காவில்

அமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்கொட் சுவிவ்ற் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மைத்திரி, ரணிலின் வாக்குறுதியை நம்ப வேண்டாம்- மகாநாயக்கரை கோருகிறார் கம்மன்பில

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து தடைகளும் நீங்கின

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

தாய்வான் வங்கி மோசடி – மைத்திரி போட்டியிட்ட அன்னத்தின் உரிமையாளர் கைது

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை, சிறிலங்காவில் உள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிய குற்றச்சாட்டில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும், புதிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான சாலிலா முனசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.