மேலும்

நாள்: 11th October 2017

ஐ.நா நிபுணர்களின் பரிந்துரைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா

ஐ.நா சிறப்பு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய- சிறிலங்கா படைகளின் ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சி புனேயில் வெள்ளியன்று ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினருக்கு இடையிலான ‘மித்ர சக்தி- 2017’ கூட்டுப் பயிற்சி, நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது. புனேயில் உள்ள அவுண்ட் இராணுவ முகாமில் இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 25ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.

வெள்ளியன்று யாழ்ப்பாணத்தில் பொது அமர்வில் பங்கேற்கிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் பொது அமர்வு ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.

ஐ.நா, அமெரிக்காவிடம் முறையிட்ட நாமல்

அமைதியாகப் போராட்டம் நடத்திய தம்மை சிறிலங்கா காவல்துறை கைது செய்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடமும், அமெரிக்காவிடமும் முறையிட்டுள்ளார்.

ருவான் விஜேவர்த்தனவுடன் பிரெஞ்சு கூட்டுப்படைத் தளபதி சந்திப்பு

இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பியாட்டன் (Rear Admiral Didier Piaton) சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கில் வெள்ளியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு

அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாளை மறுநாள் – வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நம்பிக்கையூட்டக் கூடிய பொருளாதார வளர்ச்சி – அனைத்துலக நாணய நிதியம்

2017-2018 காலப்பகுதியில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கையூட்டக் கூடிய வகையில், இருக்கும் என்று அனைத்துலக நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக போராட்டம் – நாமல் ராஜபக்ச இரவோடு இரவாக சிறையில் அடைப்பு

நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.