மேலும்

நாள்: 1st October 2017

‘புலம்பெயர் சூழலில் ஊடகமும் தாசீசியசும்’ – கிருஸ்ணா அம்பலவாணர்

உலகப்பரப்பில் ஊடகம் என்பது என்ன? அதன் பண்புகள் எவை? என்ற கேள்விகளுக்கு அவ்வளவு இலகுவாக விடை காண முடியாது. நவீன தொழில்நுட்பப் புரட்சியுடன் தோன்றிய தகவல் தொழில்நுட்பம் என்பது செய்தித்தாள் என்ற அச்சு ஊடகமாக ஆரம்பித்து இன்று வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட அதிவேக தகவல் பரிவர்த்தனை பரப்புக்களுக்குள் படர்ந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தும் தனித்தும் மானிடப்பரப்பை ஊடறுத்து நிற்கின்றது.

ஐ.நா உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்கா வரவுள்ளன

அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐ.நாவின் இரண்டு உயர்மட்டக் குழுக்கள்  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.

திடீரென ஜப்பான் பறந்தார் மகிந்த – தொண்டையில் அறுவைச் சிகிச்சை?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று திடீரென ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பத்து நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் போரை நடத்திய பிரிகேடியர் மிஸ்ராவுக்கு அருணாசல பிரதேச ஆளுனர் பதவி

இந்திய அமைதிப்படை சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்திய முக்கிய கட்டளை அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் பி.டி மிஸ்ரா, அருணாசல பிரதேச மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனி, பின்லாந்து செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் அடுத்தவாரம் புதுடெல்லி பயணம்

வடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் புதுடெல்லிக்கு அடுத்த வாரம் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். புதுடெல்லியில் நடக்கவுள்ள கருத்தரங்குகளில் பங்கேற்கவே, வட மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.