மேலும்

விஜேதாச ராஜபக்ச கூட்டு எதிரணியின் பொதுவேட்பாளரா?

Wijeyadasa Rajapaksheநீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இ ருந்து நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்ச கூட்டு எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட விஜேதாச ராஜபக்சவை கூட்டு எதிரணி, பொதுவேட்பாளராக நிறுத்தப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர்,“ கூட்டு எதிரணி ஒருபோதும் பொதுவேட்பாளருக்குப் பின்னால் செல்லாது. எதிர்காலத்தில் அவ்வாறு யாரையும் நிறுத்தாது. நாங்கள் எமது வேட்பாளரையே நிறுத்துவோம்.

விஜேதாச ராஜபக்ச எமது கட்சிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம். அவர் மட்டுமல்ல யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *