மேலும்

மாதம்: May 2017

மோடிக்கு பாதுகாப்பு வழங்க கறுப்புப் பூனைகள் கொழும்பு வந்தன

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்கும் கறுப்புப் பூனை கொமாண்டோக்கள் கொழும்பு வந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிலமும் புலமும் நலவாழ்வும் – தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துரையாடல்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் (Tamil-Norwegian Resource Association) தொடக்க நிகழ்வும் கலந்துரையாடலும் (6-5-17) சனிக்கிழமை ஒஸ்லோவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்துரைப்பேன்- சம்பந்தன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்னொரு போரை எதிர்கொள்ள நேரிடும் – சந்திரிகா எச்சரிக்கை

நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தை எட்டாது – ஐ.நா அமைப்பு கணிப்பு

சிறிலங்காவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிகச் சிறிய வளர்ச்சியையே எட்டும் என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஐ.நா பொருளாதார சமூக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை – ராஜித சேனாரத்ன

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வேகமாக வெப்படைகிறது இந்தியப் பெருங்கடல் – இந்திய ஆராய்ச்சியாளர் தகவல்

ஏனைய எல்லா பெருங்கடல்களையும் விட இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்படைந்து வருவதாக அன்டாட்டிக் மற்றும் பெருங்கடல் ஆய்வுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அமர்வும்

தமிழீழ தேசிய துக்க நாளாகிய மே 18ம் நாளன்று மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது.

கீதா குமாரசிங்கவின் பதவி ரத்து – நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்துள்ளார்.

மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நான்கு சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று கொழும்புக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.