மேலும்

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு உருத்திரகுமாரன் வேண்டுகோள்

ruthrakumaranசிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான வழிகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களைத் தணிக்க, சாத்தியமான எல்லா வழிகளிலும் தன்னார்வ அடிப்படையில் புலம்பெயர் தமிழர்கள் உண்மையான ஆதரவை வழங்க வேண்டும்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுகளுக்கு தாராளமாக பங்களிக்க அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும்.

எதிர்பாராத அனர்த்தத்தினால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது அனைவரும் கரிசனை காட்ட வேண்டும்.

இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு, உள்ளூர் உட்கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு கருத்து “சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு உருத்திரகுமாரன் வேண்டுகோள்”

  1. Esan Seelan
    Esan Seelan says:

    உண்மை இதற்கு யாரிடமும் மாற்றுக்கருத்து இருக்காது என எண்ணுகின்றேன்.சுனாமியின் பாேதும் உலகத்தமிழரின் உதவி பெ ருமெ டுப்பில் பாரஊர்திகளின் மூலம் பாே ராளிகளினால் வழங்கப்பட்டது.பின்னர் சிறுபான்மை யினருக்கு உரிமை வழங்க க் கூடாது என்பதில் அனவைரும் ஒன்றிணநை்திருந்தார்கள்.இந்த அனர்த்தம் வந்திராவிட்டால் ரத்த ஆறே ஓடியிருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *