மேலும்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயரதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் – ரணில், மங்களவுடன் பேச்சு

todd-ranil-mangala (1)அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் வில்லியம் பில் ரொட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று அவர், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்புடன் இணைந்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்கா – சிறிலங்கா இடையிலான உறவுகள் தொடர்பாகவும், சிறிலங்காவின் மறுசீரமைப்பு செயல்முறைக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக, அமெரிக்கத் தூதரகத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

todd-ranil-mangala (1)todd-ranil-mangala (2)

அதேவேளை, வெளிவிவகார அமைச்சராக இருந்து இன்று நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மங்கள சமரவீரவையும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் வில்லியம் பில் ரொட் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

அமெரிக்க- சிறிலங்கா உறவுகளின் முன்னேற்றம் தொடர்பாக மங்கள சமரவீரவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தனது கீச்சகப் பதிவு ஒன்றில், மங்கள சமரவீரவின் தலைமைத்துவம் மற்றும் அவர் வெளிவவிகார அமைச்சராக வலுவாகப் பதவியில் இருந்த காலத்தில், சிறிலங்காவுடனான அமெரிக்காவின் இருதரப்பு உறவுகளில் பல சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *