மேலும்

அபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகத்துக்கு இராஜதந்திர அந்தஸ்து வழங்குகிறது சிறிலங்கா

afdஅபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகத்தின் பணியகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கும், அதற்கு இராஜதந்திர நிலையை வழங்குவதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகம் -French Agency for Development (AFD) – நான்கு கண்டங்களில் உள்ள 60 நாடுகளில் பணியகங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பணியகங்களின் ஊடாக கொடைகளும், சலுகைக்கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

2005 ஆம் ஆண்டு பிரெஞ்சு தூதரகத்துடன் இணைந்ததாக, அபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகத்தின் பணியகம் ஒன்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் இதனூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகம் தனியான பணியகத்தை அமைத்துக் கொள்வதற்கும், அதற்கு இராஜதந்திர நிலையை வழங்குவதற்குமான பத்திரம் அமைச்சரவையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *