மேலும்

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 : போட்டி முடிவுகள்

kipiகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவாக, காக்கைச் சிறகினிலே இதழ் சார்பில் நடத்தப்பட்ட புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 போட்டியில், புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வு  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது-

புலம்பெயர்பெயர்வு வாழ்வில் கனவுகள் சுமந்தவராக எம்மோடு பயணித்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவேந்தலாக நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள்.  மூன்று பரிசுகள் எனவாக மட்டுப்படுத்தப்பட்டிந்தமையால் பரிசுகள் பின்வருவோருக்கானதாகச் சென்றடைகிறது.

பரிசுகளுக்கு தெரிவானவர்கள் :

முதற்பரிசு 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

சுடுமணல் (சுவிஸ்) https://sudumanal.wordpress.com/
ரவி ravindran.pa
– முன்மொழிவு : அருந்தா

இரண்டாம்பரிசு 7 500 இந்திய ரூபாய்கள் மற்றும்சான்றிதழ்

மின்னேறிஞ்சான்வெளி (நோர்வே) http://minnirinchan.blogspot.no/
நாவுக்கரசன் NaavukArasan
– முன்மொழிவு: ரூபன் சிவராசா

மூன்றாம் பரிசு 5 000 இந்திய ரூபாய்கள் மற்றும்சான்றிதழ்

கீதமஞ்சரி (அவுஸ்திரேலியா) www.geethamanjari.blogspot.com.au

கீதா.மதிவாணன் GeethaMathi
– முன்மொழிவு: யசோதா.பத்மநாதன்.

இப்போட்டியின் வழிகாட்டு நெறியாளர் மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)

இப்போட்டியில் நடுவர்கள்-

இரா எட்வின் (இந்தியா)

கானாப்பிரபா (அவுத்திரேலியா)

கவிதாலட்சுமி (நோர்வே)

முகிலன் (பிரான்சு)  ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலம்பெயர்ந்த வாழ்வில் தொடரும் தமிழ்த்தடத்துடன் சுயம்புகளாக இணைய வலைப்பதிவுகளைப் பொறுப்புடன் நிகழ்த்தும் அனைவருக்குமான பரிசுகளின் மாதிரியாகவே இதனைக் கொள்ளல் பொருத்தம். வாழும் தமிழாக இணையவலைகளூடாக தன்னலமற்ற சேவையாக இவர்கள் ஆற்றும் தமிழ்த்தொண்டு காலம்கடந்தும் நிலைபெறும்.

பரிசுக்குரியவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். பொறுப்புடன் இவர்களை அறிமுகம் செய்த வாசகர்களுக்கு மிக்கநன்றிகள். இந்த வாசகர்களுக்கு ஓராண்டு காக்கை இலவசமாக அனுப்பப்படும்.

தெரிவான இணைய வலைப்பதிவர்களது வெளிப்பாடுகளை இனிவெளிவர இருக்கும் காக்கை பதிவு செய்யும்.

பரிசுக்குரிய இணைய வலைப்பதிவர்களை முன்மொழிந்த திருமதிஅருந்தா, திரு.ரூபன் சிவராசா மற்றும் திருமதி யசோதா பத்மநாதன் ஆகிய முவரையும் சிறந்த வாசகர்களாக காக்கை இதழ்க்குழுமம் கௌரவித்து மகிழ்கிறது. இவர்கள் மூவருக்கும் ஓர் ஆண்டு காக்கை இதழ்கள் இலவசமாக அனுப்பப்படும்.

kipi-compition results

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *