மேலும்

கோத்தாவினால் மைத்திரியை வெற்றி கொள்ள முடியாது – இசுரு தேவப்பிரிய

gotabhayaஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும்,  கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

‘2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தெரிவு செய்யப்படுவார். முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மிகவும் விரும்பப்படும் ஒருவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். அவரிடம் கோத்தாபய ராஜபக்சவிடம் இல்லாத  அரசியல் ஆளுமையும், அனுபவமும் இருக்கிறது.

கோத்தாபய ராஜபக்ச திறமையான இராணுவ அதிகாரியாக இருக்கலாம். ஆனால், அரசியல் அனுபவம் அவருக்கு இல்லை.  எனவே அதிபராவதற்கு அவருக்குத் தகுதியில்லை.

கடந்த தேர்தலில் தெற்கிலுள்ள வாக்குகள் பிரிந்து போயின. அதனால் எல்லா இனத்தவர்களாலும், மதத்தவர்களாலும் ஆதரிக்கப்படுபவர் தான் வெற்றி பெற முடியும்.

கோத்தாபய ராஜபக்சவினால் வடக்கு கிழக்கிலுள்ள வாக்குகளைப் பெற முடியாது. கடந்த தேர்தலில் அதுவே மிகவும் முக்கியமான பங்கை வகித்திருந்தது.

எனவே அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவினால் மைத்திரிபால சிறிசேனவுக்கு சவாலாக இருக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *