13 ஆண்டுகளுக்குப் பின் சிறிலங்கா வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர்
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
1987ஆம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டத்துக்கு அமைய கிழக்கு மாகாணசபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அகமத் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கிலுள்ள மக்கள் சமஷ்டி ஆட்சிமுறையில் ஆர்வம் காட்டவில்லை என்று அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டவாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
திவிநெகும நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பிரான்சின் தென்பகுதி நகரான நைசில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா சபையின் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் 31 டிசம்பர் 2016 அன்று முடிவுறவுள்ள நிலையிலேயே அடுத்த செயலாளர் நாயகத் தெரிவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார் என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தன்மைகள், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் நெருக்கமான செல்வாக்கை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால்.