மேலும்

மாதம்: June 2016

10 வீதமான வெடிபொருட்களே ஆயுதக்கிடங்கில் இருந்தன – மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்ட போது, 10 வீத வெடிபொருட்களே அங்கு இருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தின், மேற்குப் பிராந்திய படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி பதவி விலக வேண்டும் – கோத்தா

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்குப் பொறுப்பேற்று, சிறிலங்கா இராணுவத் தளபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கோரியுள்ளார்.

உருக்குலைந்து தரைமட்டமாகக் கிடக்கும் சலாவ இராணுவ முகாம் – ஒளிப்படங்கள்

கொஸ்கம –  சலாவ சிறிலங்கா இராணுவ முகாம் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தினால் முற்றாகவே அழிந்து போயுள்ளது. வெடிபொருள்கள் சேமிக்கப்பட்டிருந்த, கட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து தரைமட்டமாகியுள்ளன.

நிதிமோசடி வழக்கு – மீண்டும் கைது செய்யப்பட்டார் பசில்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, நிதிமோசடிக் குற்றச்சாட்டில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அவசரமாக கூடுகிறது தேசிய பாதுகாப்புச் சபை

கொஸ்கம- சலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் நேற்றுமாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்துக் குறித்து ஆராய்வதற்காக, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபை அவசரமாக இன்று கூடவுள்ளது.

கொஸ்கமவில் பேரழிவை ஏற்படுத்திய ஆயுதக்கிடங்கு – ஒளிப்படங்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் நேற்றுமாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தினால், அந்தப் பிரதேசமெங்கும் பாதிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலையிலும் இரண்டு பாரிய குண்டுகள் வெடித்த சத்தங்கள் கேட்டன.

சலாவ ஆயுதக்கிடங்கில் இன்னமும் தொடரும் வெடிப்புகள்- பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்

சிறிலங்கா இராணுவத்தின் சலாவ முகாம் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்னமும் சிறியளவிலான வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்துக்கு நாசவேலை காரணமா? – அமைச்சர் சாகல சந்தேகம்

கொஸ்கம – சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் நேற்றுமாலை ஏற்பட்ட வெடிவிபத்துக்கு, நாசவேலை காரணமாக இருக்கக் கூடும் என்று, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆயுதக் கிடங்குகள் நாசம் – வேவு விமானங்கள் மூலம் கண்காணிப்பு

கொழும்புக்குக் கிழக்காக, 36 கி.மீ தொலைவில் உள்ள கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்து சேதத்தை மதிப்பிட காலஅவகாசம் தேவை – பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு, காலஅவகாசம் தேவைப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.