மேலும்

நாள்: 21st June 2016

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் அமெரிக்க நுழைவிசைவு மறுப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கப்பலில் வரும் திருவள்ளுவர் சிலைகளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் நிறுவ ஏற்பாடு

சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் 16 திருவள்ளுவர் சிலைகள், இலங்கையில் உள்ள 13 பாடசாலைகள் மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

லசந்த, பிரகீத் கொலைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் மாயம் – சிறிலங்கா இராணுவம் கைவிரிப்பு

ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பான ஆவணங்கள் காணாமற்போயிருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி கோரும் கம்மன்பிலவின் மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான, உதய கம்மன்பில, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.