மேலும்

நாள்: 23rd June 2016

படகில் இருந்தவர்களில் பலர் சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாகியவர்கள் – தி கார்டியன்

இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தலையிடக் கூடாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

தென் சீனக்கடல் விவகாரத்தில் தலையீடு செய்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம் இல்லாதவற்றை சுட்டிக்காட்டுக – ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அவசர கடிதம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லாத விடயங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

கொத்தணிக் குண்டு குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

இந்தோனேசியாவிலுள்ள 44 அகதிகளையும் திருப்பி அழைத்துக் கொள்ளத் தயார் – சிறிலங்கா

அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் வழியில், படகு பழுதடைந்ததால், இந்தோனேசியாவில் தரைதட்டிய 44 இலங்கைத் தமிழ் அகதிகளையும், மீண்டும் திருப்பி அழைத்துக் கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளது.