மேலும்

நாள்: 4th June 2016

விடுதலைப் புலிகள் மீதான சிறிலங்காவின் குறி – அமெரிக்கா கவலை

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதிலேயே சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்துவதால், ஐஎஸ் தீவிரவாதம் போன்ற புதிய அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துவது பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு 1.5 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது அனைத்துலக நாணய நிதியம்

சிறிலங்கா அரசாங்கத்தின் நிதி நிலையை முன்னேற்றுவதற்கு, 1.5 பில்லியன் டொலர் ( 220 பில்லியன் ரூபா) கடனுதவியை வழங்க அனைத்துலக நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருகோணமலை பெருநகர அபிவிருத்தியை திட்டமிடும் பொறுப்பு சிங்கப்பூர் நிறுவனத்திடம்

திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிங்கப்பூரின் உட்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சேர்பனா ஜுரோங் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஆளுனர் பதவியை விட்டு விலகமாட்டேன் – ஒஸ்ரின் பெர்னான்டோ

தாம் ஆளுனர் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

பிரான்சுடன் உடன்பாடுகளில் கையெழுத்திட்டார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதுடன், இருதரப்பு உடன்பாடுகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.

உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா அரசு அறிவிப்பு

பொறுப்புக்கூறுவதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சிறிலங்காவின் தொழிற்பயிற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்க முடியாது – சிறிலங்கா திட்டவட்டம்

சிறிலங்கா கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மகிந்தவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை- சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மீண்டும் பீஜிங் செல்கிறார் சிறிலங்கா அதிபர் – சீன அதிபரிடம் இருந்து அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக ஆராய்வதற்கு, உண்மை, நீதி, மற்றும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் அடுத்த வாரம் கொழும்பு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.