மேலும்

நாள்: 19th June 2016

இலங்கை அகதிகளை கடலில் தள்ளிவிடும் திட்டத்தில் மாற்றமில்லை – இந்தோனேசியா

தரையிறங்க அனுமதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளை, மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு சென்று விடும் திட்டம் கைவிடப்படவில்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களில் சிறிலங்காவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்

சிறிலங்காவில் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி – ஜப்பானிய ஊடகத்துக்கு மகிந்த சூசகமாக தெரிவிப்பு

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தாம் போட்டியிடக் கூடும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஜப்பான் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவோரை சித்திரவதை செய்யக் கூடாது – சிறிலங்கா அதிபர் கண்டிப்பான உத்தரவு

தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் அல்லது தடுத்து வைக்கப்படும் எவரையேனும், சித்திரவதை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கண்டிப்பான உத்தரவுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கும், காவல்துறைக்கும் விடுத்துள்ளார்.

இந்திய உதவியுடன் திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி அபிவிருத்தி

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோரியது சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதிக் காவல்துறை மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ள சிறிலங்கா காவல்துறை, அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.