மேலும்

நாள்: 15th June 2016

அலவி மெளலானா காலமானார்

மேல் மாகாண முன்னாள் ஆளுனரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான அலவி மெலானா இன்று மாலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 84 ஆகும்.

சோமவன்ச அமரசிங்க காலமானார்

ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க ( வயது 74) இன்று அதிகாலை காலமானார் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் சோமவன்ச மரணமானார் என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஆதரவுடனேயே எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும் – சிறிலங்கா அதிபர்

அனைத்துலக ஆதரவுடனேயே எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம்  எனும் தொனிப்பொருளில் நேற்று பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறலில் அமெரிக்காவின் நிலைப்பாடு உறுதியானது – நிஷா பிஸ்வால்

சிறிலங்காவில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதிலும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கு தேவையான  நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும், அமெரிக்கா மிகவும் உறுதியான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வடக்கின் மீது திரும்பும் சீனாவின் கவனம் – அபிவிருத்திக்கு உதவப் போவதாக அறிவிப்பு

முப்பதாண்டு காலப் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை – மோடியிடம் வலியுறுத்தினார் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் நியதிச்சட்டத்துக்கு வட மாகாணசபை அங்கீகாரம்

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதிய, நியதிச்சட்டம், நேற்று வடக்கு மாகாணசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் 54 ஆவது அமர்வில், முதலமைச்சர் நிதிய நியதிச்சட்ட பிரேரணையை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்தார்.