மேலும்

நாள்: 11th June 2016

சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே நாசம் – வலுக்கிறது சந்தேகம்

சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே சலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் நாசமாகியதாக, சிறிலங்கா இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகமான “ராவய” செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியா கட்டிய ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள முதலாவது, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

வடக்கில் இருந்து படைமுகாம்களை அகற்றக் கூடாது – உதய கம்மன்பில

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக, சிறிலங்கா இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலதிக வெடிபொருட்களை வெளிநாடுகளுக்கு விற்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு

சிறிலங்கா படைகளின் தேவைக்கு அதிகமாக உள்ள வெடிபொருட்களை விற்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்க தெரிவித்தார்.

சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும்- சம்பந்தன்

வடக்கு கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் உடனடியாக திரும்பக் கையளிக்கப்பட  வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்த வாக்களிக்காததன் மர்மம் – விளக்குகிறார் கம்மன்பில

தனது பொன்னான நேரத்தைச் செலவிடுவதற்கு பெறுமதியற்றது என்பதால் தான், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சலாவ வெடிவிபத்து – இராணுவத்தினர், பொதுமக்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஜப்பான் சென்றார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், நேற்றிரவு ஜப்பானின் நரிடா விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

50 ஆயிரம் படையினரை களமிறக்கத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி

ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சலாவ பிரதேசத்தில் உள்ள 12 கிராம அதிகாரி பிரிவுகளிலும், வழமை நிலையை ஏற்படுத்த 50 ஆயிரம் இராணுவத்தினரைக் களமிறக்கத் தயார் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.