மேலும்

நாள்: 26th June 2016

படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் மீள ஒப்படைக்கப்படாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

வடக்கு கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் முழுமையாக மீள ஒப்படைக்கப்படாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிடம் இருந்து வெடிபொருட்களை மீளப்பெற சீன நிறுவனம் மறுப்பு

சிறிலங்கா அரசாங்கத்துக்கு வெடிபொருட்களை விநியோகம் செய்த சீன ஆயுத ஏற்றுமதி நிறுவனம், மீதமுள்ள வெடிபொருட்களை மீளப்பெற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

தனது பதவிக்காலத்தில் கொத்தணிக் குண்டுகளை வீசவில்லையாம் – கோத்தா கூறுகிறார்

தாம் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த காலத்தில், சிறிலங்கா படைகளால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புலிகளை அழித்த எனது ஆட்சிக்கால நினைவுகளைத் துடைத்தெறிய முயற்சி – மகிந்த குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த தனது ஆட்சிக்காலம் தொடர்பான பொதுமக்களின் நினைவுகளைத் துடைத்தெறிய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உக்ரேனுடன் குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் உடன்பாடு – மகிந்தவுக்கு அடுத்த ஆப்பு

சிறிலங்காவில் தேடப்படும்- உக்ரேனில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை கொழும்பிடம் கையளிப்பதற்கு வசதி செய்யும், உடன்பாடு ஒன்று சிறிலங்காவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஜப்பான் விமான நிலையத்தில் மகிந்தவுக்கு உடற்சோதனை

ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, நரிடா விமான நிலையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

750 மில்லியன் ரூபா செலவில் புத்தளத்தில் புதிய உள்நாட்டு விமான நிலையம்

புத்தளம் பாலாவியில், புதிய உள்நாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விமான நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு 750 மில்லியன் ரூபா செலவிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழுவை நியமித்தது கூட்டமைப்பு

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான குழுவொன்றையும் நியமித்துள்ளது.