மேலும்

நாள்: 25th June 2016

பிரித்தானியாவின் முடிவினால் சிறிலங்காவுக்கும் பாதிப்பு – றோகித போகொல்லாகம

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதால், சிறிலங்காவுக்கு நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ஆனையிறவில் அமைகிறது அனைத்துலக துடுப்பாட்ட மைதானம்

ஆனையிறவுப் பகுதியில், அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஒன்றை கட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சீனா சென்றார் சிறிலங்கா நிதியமைச்சர்

சீனாவின் முன்முயற்சியில், அண்மையில் உருவாக்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின், முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்று பீஜிங்கில் ஆரம்பமாகிறது.

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு அழுத்தம்

2020ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த அதிபர் தேர்தலில், மீண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதித்தடுப்பை உடைத்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகாயம்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நடத்தப்பட்ட கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, தடுப்புகளை உடைத்துச் செல்ல முயன்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

பிரித்தானியாவின் முடிவினால் சிறிலங்காவுக்கும் பாதிப்பு – புதிய உடன்பாட்டுக்கு திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகவுள்ளதையடுத்து, அந்த நாட்டுடன் புதிய பொருளாதார உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் ஒருமனதாக நிறைவேறியது

தகவல் உரிமைச் சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஒருமனதாக- வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. நேற்றுமுன்தினம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்ட மூலம் மீதான விவாதம் ஆரம்பமானது.