மேலும்

நாள்: 29th June 2016

போரில் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் பாரதூரமானது – மங்கள சமரவீர

இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான விடயமாக இருக்கும் என்று, சி்றிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்கினால் மகிந்தவே தலைவர் – என்கிறார் விமல் வீரவன்ச

கூட்டு எதிரணியினரால், புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டால் அதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்குவார் என்று, தேசிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை எச்சரிக்க வேண்டும் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோன் கெரிக்கு அழுத்தம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றமான- காங்கிரசின்- 24 உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்கா விவகாரத்தில் நேரடியாகத் தலையிடாது இந்தியா – புதுடெல்லி கொள்கை வகுப்பாளர்கள்

சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா நேரடியான தலையீடுகளை இனி மேற்கொள்ளாது என்று, புதுடெல்லியில் உள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எட்கா உடன்பாட்டை விரைவுபடுத்த புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா அமைச்சர்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கையெழுத்திடத் திட்டமிடப்பட்டுள்ள, எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை, விரைவுபடுத்துவது தொடர்பாக புதுடெல்லியுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை சிறிலங்கா அரசாங்கம், இந்தவாரம் இந்தியாவுக்கு அனுப்பவுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலைவரிடம் 3 மணிநேரம் விசாரணை

தீவிரவாத விசாரணைப் பிரிவின் (ரிஐடி) முன்னாள் தலைவரான, ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகிஸ்ராவிடம், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு நேற்று மூன்று மணிநேரம் விசாரணைகளை நடத்தியுள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா விண்ணப்பம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா அரசாங்கம் நேற்று மாலை விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.