மேலும்

நாள்: 10th June 2016

வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா நிராகரித்தது குறித்து அமெரிக்க காங்கிரஸ் ஏமாற்றம்

போர் தொடர்பாக பொறுப்புக்கூறும் உள்ளகப் பொறிமுறையில்,  வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மறுப்புத் தெரிவித்திருப்பது குறித்து, அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக் குழு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா விவகாரம் குறித்து பிரித்தானிய அமைச்சர் பேச்சு

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், நேற்று ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஒடுக்குமுறை அரசுகளின் காவல்துறைக்கு பயிற்சி – ஸ்கொட்லாந்து காவல்துறை மீது குற்றச்சாட்டு

சிறிலங்கா உள்ளிட்ட ஒடுக்குமுறை அரசாங்கங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை பொதுமக்களுக்குத் தெரியாமல், மறைத்து விட்டதாக ஸ்கொட்லாந்து காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணை – வாக்கெடுப்பை புறக்கணித்த இரு முக்கிய அமைச்சர்கள்

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், இரண்டு முக்கிய அமைச்சர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சலாவ வெடிவிபத்து- புலிகளுக்கு தொடர்பிருப்பதாக கண்டறியப்படவில்லை

கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த சான்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று, சிறிலங்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கை மோடியுடன் இணைந்து திறந்து வைக்கிறார் மைத்திரி

இந்திய அரசின் நிதியுதவியுடன், மீளப் புனரமைக்கப்பட்டுள்ள யாழ். துரையப்பா விளையாட்டரங்கை,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.