மேலும்

மாதம்: June 2016

இலங்கைத் தமிழ் அகதிகள் படகு விவகாரம் – இந்தோனேசியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

அவுஸ்ரேலியா நோக்கிப் பயணமாகிய போது, இயந்திரக் கோளாறினால் இந்தோனேசியாவின்  ஆச்சே மாகாணத்தில் தரைதட்டிய இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

புலிகளால் கைவிடப்பட்ட பதுங்குகுழியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

மன்னார், மடு பிரதேசதத்தில் உள்ள பாலம்பிட்டியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் பலவற்றை  மீட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

துரையப்பா விளையாட்டரங்கை மைத்திரியும் மோடியும் இன்று திறந்து வைக்கின்றனர்

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ – வெளிநாட்டுப் பின்னணியுடையோர் பாதிப்பு

நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ காவல்துறை திணைக்களத்தினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட, அதேவேளை பல பத்து ஆண்டுகளாக ’நோர்வேஜியக் குடியுரிமை’ பெற்றிருந்தவர்களின்  ‘பிறந்த இடம்’  கடவுச்சீட்டிலிருந்து நீக்கப்படுகின்றது.

அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்கு இழுத்துச் செல்லத் தயாராகிறது இந்தோனேசியா

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை இந்தோனேசிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சீனாவுடன் வலுவான இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்படும் – சிறிலங்கா பிரதமர்

எதிர்காலத்தை மனதில் கொண்டு சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வலுவான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அவசரப்படக் கூடாது – சுமந்திரன் கோரிக்கை

ஆட்சி மாற்றத்தின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பதால், சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அவசரப்பட்டு திருப்தி வெளியிட்டு விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அகதிகள் படகை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப இந்தோனேசியா முடிவு

அவுஸ்ரேலியா நோக்கில் செல்லும் வழியில் மோசமான காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகு மீண்டும் இந்தியாவுக்கே பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா மீதான மீன் ஏற்றுமதித் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு சிறிலங்காவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய கரையில் குதித்த இலங்கை அகதிப் பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு

இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் குதித்த பெண்களை எச்சரிக்கும் வகையில் இந்தோனேசிய காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.