மேலும்

புலிகளால் கைவிடப்பட்ட பதுங்குகுழியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

minesமன்னார், மடு பிரதேசதத்தில் உள்ள பாலம்பிட்டியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் பலவற்றை  மீட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா விமானப்படையி்ன் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்பட்ட தேடுதலின் போதே, புலிகளால் கைவிடப்பட்ட பதுங்குகுழியில் இருந்து இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

74 மிதிவெடிகள், 6 மோட்டார் குண்டுகள்,  3 கைக்குண்டுகள், 1 சிறிய குண்டு உள்ளிட்ட வெடிபொருட்களே கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் நீதிவான் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்ட இந்த ஆயுதங்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *